தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரசாத் ஸ்டுடியோவுக்குள் இளையராஜாவை அனுமதிக்க முடியாது- உரிமையாளர்கள் திட்டவட்டம்! - பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் மீது இளையராஜா வழக்கு

சென்னை: பிரசாத் ஸ்டுடியோவுக்குள் இளையராஜாவை அனுமதிக்க முடியாது என ஸ்டுடியோ உரிமையாளர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Music Director Ilaiyaraaja
இசையமைப்பாளர் இளையராஜா

By

Published : Dec 21, 2020, 9:04 PM IST

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் சுமார் 40 ஆண்டுகளாக திரைப்படங்களுக்கு இசையமைக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தார்.

இதையடுத்து, பிரசாத் ஸ்டுடியோ இடத்தில் இருந்து இளையராஜா வெளியேற வேண்டும் என ஸ்டுடியோ நிர்வாகம் தெரிவித்திருந்தது. இட உரிமை தொடர்பாக இரு தரப்புக்கும் இடையேயான வழக்கு ஏற்கனவே 17வது உதவி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே, பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள தனக்கு சொந்தமான இசை கருவிகள், விருதுகள் உள்ளிட்ட பொருள்களை எடுத்துக்கொள்ளவும், தன்னை ஒருநாள் தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, "40 ஆண்டுகளாக தான் பயன்படுத்தி வந்த இடத்தில் இளையராஜாவை ஒரு நாள் அனுமதிப்பதில் என்ன சிக்கல் உள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதி, அவருக்கு சொந்தமான பொருள்களை எடுத்துக்கொள்ளவும், சில மணி நேரங்கள் தியானம் செய்து கொள்ளவும் இளையராஜாவுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர்கள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்."

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, "பொருள்களை எடுத்துக்கொள்ள இளையராஜாவை அனுமதித்தால் ரசிகர்கள் அதிகளவில் கூடி விடுவார்கள் என்பதால் அவரை அனுமதிக்க முடியாது" என பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதி, இளையராஜா, "நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் வழக்கறிஞர் ஆணையர் மற்றும் இரு தரப்பு வழக்கறிஞர்கள் மட்டும் ஸ்டுடியோவுக்குள் சென்று பொருள்களை எடுத்துக்கொள்ள அனுமதிப்பது தொடர்பாக விளக்கம் அளிக்க பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு (டிச.22) தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: அய்யப்பனாக பவன் கல்யாண், கோஷியாக ராணா!

ABOUT THE AUTHOR

...view details