சென்னை:கிண்டி - வேளச்சேரி செக்போஸ்ட் பேருந்து நிறுத்தத்தில் நரிக்குறவரான சமூகத்தை சேர்ந்த குமார் கார்த்திக் மற்றும் அவரது மனைவி, குழந்தை ஆகியோர் தங்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல அனைவரும் பேருந்து நிறுத்ததில் உறங்கி கொண்டிருந்துள்ளனர்.
இன்று காலையில் வழக்கமாக பேருந்து நிறுத்தத்திற்கு வந்த பயனி ஒருவர், கழுத்து அறுபட்ட நிலையில் குமார் கார்த்திக் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த கிண்டி காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர்.