சென்னை: சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் விஜயகுமார் என்பவரின் சகோதரர் ஓவியக்குமார். அசோக் நகர் பகுதியில் வசித்து வரும் இவர், கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இவர் வாங்கிய கடனுக்கு மேல் பல மடங்கு வட்டி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் கந்து வட்டிக்காரர்கள் தன்னையும், தனது குடும்பத்தினரையும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், மேலும் தன் மீதும், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் தனது சகோதரர் மீதும் வழக்கறிஞர்கள் மூலம் வழக்குப் பதிவு செய்வதாக மிரட்டி வருவதாகவும் ஓவியக்குமார் கூறுகின்றார்.