சென்னை: ஓடும் ரயிலில் வெள்ளி வியாபாரியிடம், நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த நபரை, தனிப்படை போலீசார் 2 மாதங்களுக்கு பிறகு கைது செய்து உள்ளனர். சென்னை புரசைவாக்கம் வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 44).
வெள்ளி வியாபாரியான இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி இரவு, பெங்களூருவில் வெள்ளி பொருட்களை வாங்கி உள்ளார். பின்னர் வாங்கிய வெள்ளி பொருட்களுடன், சென்னைக்கு அரக்கோணம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்த படுக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்துள்ளார்.
அப்போது அவரிடம் இருந்து 4 லட்ச ரூபாய் மதிப்பிலான 5 கிலோ 300 கிராம் எடை கொண்ட வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.13 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வெள்ளி வியாபாரி சதீஷ்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சதீஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்க ரயில்வே காவல்துறை கூடுதல் இயக்குநர் வனிதா உத்தரவிட்டார்.