சென்னை ஆயிரம் விளக்கு ஹாடஸ் சாலையில் வசித்து வருபவர் சுதர்சன் சாரி (45). புகைப்படக்காரரானஇவர் தனது தாய் சித்ராவுடன் வசித்து வந்தார். தனக்கு 45 வயதாகியும் திருமணமாகாததால் நீண்ட நாள்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இச்சூழலில் சுதர்சன் நேற்று காலை திடீரென்று வீட்டின் ஆறாவது மாடிக்குச் சென்று, மேலிருந்து கீழே குதித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சுதர்சன் உயிரிழந்தார். தகவலறிந்து நுங்கம்பாக்கம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதன்பின் சுதர்சனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.