சென்னை: ஆழ்வார்பேட்டையில் உள்ள டி.டி கிருஷ்ணமாச்சாரி மேம்பாலம் வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், திடீரென கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதில் அவருக்கு கால்முறிவு ஏற்பட்டது. போக்குவரத்து காவலர்கள் உதவியுடன் பொதுமக்கள் அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மயிலாப்பூர் காவல் துறையினர் அந்த நபர் வந்த வாகன எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.