தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர் கைது - பெண்களுக்கு எதிரான வன்முறை

சென்னை: அயனாவரத்தில் குளியலறையில் குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர் கைது
பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர் கைது

By

Published : Feb 25, 2020, 6:46 PM IST

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த குமாரி என்பவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தான் கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் அயனாவரத்தில் வசித்து வருவதாகவும், கடந்த 5ஆம் தேதி வீட்டில் உள்ள குளியலறையில் தனது மூத்த மகள் வேலைக்கு செல்வதற்காக குளித்துக் கொண்டிருக்கும்போது, குளியலறை ஓட்டை வழியாக யாரோ வீடியோ பதிவு செய்வதை கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும், உடனடியாக சென்று பார்க்கும்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் வினோத் என்பவர் தனது அலைபேசியில் வீடியோ எடுத்ததாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், அந்த இடத்திலிருந்து வினோத் தப்பிச் செல்லும்போது, வினோத்திடமிருந்து அவரது அலைபேசியை பறித்து வைத்துக் கொண்டதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

பின் தனது கணவருடன் சென்று வினோத்திடம் விசாரணை செய்யும்போது, வினோத் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குமாரி குற்றஞ்சாட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் வினோத்தின் அலைபேசியை ஆய்வு செய்ததில் குளியலறை வீடியோக்கள் இடம்பெற்றிருந்ததால். அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அயனாவரம் போலீசாரிடம் அளித்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், புகார் உண்மை என தெரியவந்ததால், வினோத் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், காவல் துறையினர் வினோத்தின் அலைபேசியை ஆய்வு செய்ததில், இதேபோல் பல குளியலறை வீடியோக்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து ஆட்டோ ஓட்டுநரான வினோத்தை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details