சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலை துவாரகா நகர் 3ஆவது தெருவைச் சேர்ந்தவர் ரவணம்மா (65). இவரது மகன் பிரசாத் பாஜக பிற்படுத்தப்பட்டோர் அணியின் தென் சென்னை மாநில பொதுச் செயலாளர்.
மூதாட்டி ரவணம்மா நேற்று (ஜன.23) மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ராவணம்மாவை வழிமறித்து, அருகில் இருந்த ஒரு வீட்டைக் காட்டி, அங்கு குழந்தைகள் நிகழ்ச்சி நடப்பதாகவும், அதில் கலந்து கொண்டு குழந்தைகளை ஆசிர்வதிக்க பெரியவர்கள் வரவேண்டும் என குடும்பத்தினர் எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளை ஆசிர்வதிப்பது புண்ணியம் என நம்பிய மூதாட்டி ரவணம்மா, சற்றும் சந்தேகிக்காமல் அங்கு சென்றுள்ளார். அவரை அந்த வீட்டின் கீழ்படியில் அமரச் சொல்லிவிட்டு, அந்த அடையாளம் தெரியாத ஆசாமி யாரிடமோ பேசுவது போல பாவ்லா காட்டி மூதாட்டியை நம்ப வைத்துள்ளார். சிறிது நேரத்தில் கீழே வந்த அவர், குழந்தைகளின் பெற்றோர் பணக்காரக் குடும்பத்தினர் என்றும், குழந்தைகளை ஆசிர்வதிப்பவர்களுக்கு தங்க மோதிரம் அளிப்பார்கள் என்றும் மெல்ல மூதாட்டிக்கு ஆசை காட்டியுள்ளார்.