சென்னை ராயப்பேட்டை செல்ல பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பைசுதீன் (48). இவர் மதுரையைச் சேர்ந்த ராஜா உசேன் (48) என்பவரிடம் ஆறு மாதங்களுக்கு முன்பு வியாபாரம் சம்பந்தமாக 10 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். நேற்று அண்ணா சாலையில் உள்ள தனியார் விடுதி அருகே ராஜா உசேன், பைசூதினை வரவழைத்து கடன் தொகையை கேட்டுள்ளார்.
அப்போது, அவர் சிறிது கால அவகாசம் வேண்டும் என கேட்டதால் ராஜா உசேனின் மகன் முகமது சபியுல்லா பைசுதீனை அடித்து காரில் ஏற்றிக்கொண்டு ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைக் கண்ட பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர்.
அதனடிப்படையில், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களுடன் விசாரணை செய்தபோது ராஜா உசேன் உட்பட ஐந்து பேர் காவல் ஆய்வாளர் மோகன் தாஸை சராமரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவர்களுடன் காவல் துறையினர் போராடி ஐந்து பேரையும் கைது செய்து பைசுதினை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவெல்லிக்கேணி காவல் நிலையம் அதில், மதுரையைச் சேர்ந்த ராஜா உசேன் (48), முகமது சைபுல்லா (27), ரஹ்மதுல்லா (25), ஆசிப் கான் (22), தவ்பிக் (22) என தெரியவந்தது. மேலும் ராஜா உசேன் மீது ஏற்கனவே 1995 ஆம் ஆண்டு நடந்த வெடிகுண்டு சம்பவம், வில்லிவாக்கம் ராஜகோபால் கொலை வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே ஆட்டோ ஓட்டுனர் வெட்டிப் படுகொலை!