எப்போதும் கூட்ட நெரிசலாகக் காணப்படும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், இரவு நேரங்களில் ஏராளமான பயணிகள் உறங்குவதுண்டு. இந்நிலையில், நேற்று இரவு மேல்மலையனூரைச் சேர்ந்த ராணுவ வீரர் தமிழ்ச்செல்வன் பேருந்து நிலையத்தில் உறங்கிக்கொண்டிருந்தார்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பிரபல கொள்ளையன் கைது! - Man jailed for pick pocketing sleeping commuters
சென்னை : கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உறங்கிக்கொண்டிருந்த ராணுவ வீரரிடம் பிக்பாக்கெட் அடிக்க முயன்ற பிரபல கொள்ளையன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
![கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பிரபல கொள்ளையன் கைது!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4943097-thumbnail-3x2-jail.jpg)
அப்போது, அங்கு வந்த ஒரு நபர் தமிழ்ச்செல்வன் மீது போர்வையைப் போர்த்துவதாக சென்று பிக்பாக்கெட் அடித்துள்ளார். இதனிடையே திடீரென விழித்துக்கொண்டு தமிழ்ச்செல்வன், அந்த நபரை கையும் களவுமாகப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தார்.
காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அந்த நபர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் வினோத் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, வினோத் மீது வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர் முருகன், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தார். வினோத்திடமிருந்து மூன்று பைகள் மேலும் அதிலிருந்த 2500 ரூபாய் ரொக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.