தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிப்-டாப் உடையுடன் நூதனமாக பணத் திருட்டில் ஈடுபட்டவர் கைது - நூதன திருட்டில் ஈடுபட்டவர் கைது

சென்னை: வங்கிகள் மற்றும் மின் கட்டணம் செலுத்தும் இடங்களில் மக்களுக்கு உதவுவது போல் நின்று பணத்தை நூதன முறையில் மோசடி செய்த வந்த டிப்-டாப் ஆசாமியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Man involving in money cheating arrested
நூதனமாக பணத்தை திருடி வந்த ரமேஷ் கைது

By

Published : Sep 24, 2020, 12:06 PM IST

சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வில்சன் என்பவர் பிஸ்கட்டுகள் விநியோகம் செய்து வருகிறார். உணவகம் ஒன்றில் பிஸ்கட் விநியோகம் செய்வதற்காக நின்று கொண்டிருந்தபோது, டிப்-டாப் ஆடையுடன் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், அவர் அருகே வந்து 2000 ரூபாய்க்கு சில்லறை வேண்டும் எனக்கேட்டுள்ளார். இதையடுத்து தன் கையிலுள்ள சில்லறை நோட்டுக்களை அந்த நபரிடம் வில்சன் கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து வில்சனின் கவனத்தை திசை திருப்பி, டிப்-டாப் ஆசாமி 2000 ரூபாய் சில்லறை பணத்துடன் மாயமாகியுள்ளார். இதுதொடர்பாக அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த காவல் துறையினர், பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னையின் பல்வேறு இடங்களில் நூதன முறையில் பொதுமக்களிடம் மோசடி செய்யும் 'டிப்-டாப் மோசடி மன்னன்' இவர் என்பது தெரியவந்துள்ளது.

டிப்-டாப் உடையுடன் ரமேஷ்

இதுதொடர்பாக காவல் துறையினர் தரப்பில் கூறும்போது, 'மாநகரில் உள்ள முக்கிய வங்கிகளான பேங்க் ஆஃப் பரோடா, எஸ்பிஐ, இந்தியன் வங்கி கிளைகளில் டிப்-டாப்பாக ஆடை உடுத்திக்கொண்டு வாசலில் நிற்பார். வங்கி சேவை முடியும் நேரத்திற்கு பத்து நிமிடத்திற்கு முன்பாக வங்கி வாசலில் நின்றுகொண்டு வங்கி ஊழியர் போல் பொதுமக்களை வழிநடத்துவார். அவர்களுக்கு வங்கிக்கணக்கில் பணத்தை டெபாசிட் செய்வதற்கோ அல்லது எடுப்பதற்கோ உதவுவது போல் சலான் நிரப்பச் சொல்வார். அதை நம்பி சலான் நிரப்பிக் கொடுப்பவர்கள் மற்றும் பணம் கொடுப்பவர்கள் ஆகியோரை வங்கியின் வெளியில் இருக்கையில் அமர வைத்துவிட்டு, பணத்துடன் மாயமாகி விடுவார்.

அதேபோல் மின் கட்டணம் செலுத்தும் இடங்களில், கவுண்டர் மூடும் சமயத்தில் தான் மின் கட்டணம் கட்டித் தருவதாகக் கூறி பலரிடம் ஏமாற்றி இருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், கடைகளிலும் சில்லறை கேட்பது போல் நடித்து, சில்லறையை மற்றும் பெற்றுக்கொண்டு கடைக்காரர்கள் கவனத்தை திசைதிருப்பி பணத்தை ஏமாற்றியும் சென்றுள்ளார்.

இந்த நூதன மோசடிகள் தொடர்பாக எழும்பூர், கீழ்ப்பாக்கம், ஓட்டேரி, செம்மஞ்சேரி, சிந்தாதிரிப்பேட்டை, துரைப்பாக்கம், பட்டினப்பாக்கம் காவல் நிலையங்களில் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் ரமேஷ் மீது நிலுவையில் உள்ளன. மேலும், சில வழக்குகளுக்காக அவர் கைதும் செய்யப்பட்டுள்ளார்' என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஒரே நாளில் 10 இடங்களில் கத்திமுனையில் வழிப்பறி : பொதுமக்கள் அச்சம்!

ABOUT THE AUTHOR

...view details