தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளைஞரிடம் கண்ணிமைக்கும் நேரத்தில் செல்போன் பறிப்பு... பாதசாரிகள் கவனம்... - Cell phone robbery in Chennai

சென்னையில் நடந்து சென்றுகொண்டிருந்த இளைஞரிடம் பைக்கில் வரும் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் செல்போனை பறித்து சென்றுள்ளார். அதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 24, 2022, 11:19 AM IST

சென்னை:விருகம்பாக்கம் ஏவிஎம் அவென்யூ 2ஆவது தெருவை சேர்ந்தவர் வருண். தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஏவிஎம் அவென்யூ வழியாக நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் அவருடைய செல்போனை பறித்து சென்றார்.

இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்த காட்சிகள் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தன. இந்த காட்சிகள் வைத்து போலீசார் விசாரணை செய்தபோது, அவர் சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்த எபி (எ) எபினேசர்(29) என்பது தெரியவந்தது.

சென்னையில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர் கைது

இதையடுத்து ராயபுரம் பகுதியில் பதுங்கி இருந்த எபினேசரை, விருகம்பாக்கம் போலீசார் சுற்றி வளைத்து நேற்று (அக்.23) கைது செய்தனர். காவல் நிலையத்தில் அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இவர் பல மாதங்களாக இரவு நேரத்தில் தனியாக சாலையில் செல்லும் நபர்களைக் குறி வைத்து, செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும் அவரிடமிருந்து 11 விலை உயர்ந்த செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: சோழவந்தான் அருகே தண்டவாளத்தில் வெள்ளம்... ஊர்ந்து செல்லும் ரயில்கள்...

ABOUT THE AUTHOR

...view details