தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாதவரத்தில் மாஞ்சா நூல் அறுத்து ஒருவர் காயம்

திருவள்ளூர்: மாதவரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தவரின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்ததால், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Man injured after Manja slit his neck in madhavaram
Man injured after Manja slit his neck in madhavaram

By

Published : Aug 16, 2020, 5:08 PM IST

சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த மாதவன் (36) என்பவர் வீடு, நிறுவனங்களுக்கு கிரில் கதவு அமைத்து அதில் வெல்டிங் செய்து வரும் தொழில் செய்துவருகிறார். இந்நிலையில், நேற்று (ஆக. 15) மாதவரத்திலிருந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த மாதவன் மீது சற்றும் எதிர்பாராத நிலையில் மாஞ்சா நூல் அவரது கழுத்தில் அறுப்பட்டது.

இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த மாதவனை மீட்ட அருகில் இருந்தவர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்த மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் கோபிநாத், இது குறித்து வழக்குப் பதிவு செய்து மாஞ்சா நூலை பயன்படுத்தியவர்களை தேடி வருகிறார்.

இதையும் படிங்க...ஜஸ்கிரீமில் விஷம்;குடும்பத்தை தீர்த்துக்கட்ட நினைத்த இளைஞன் - கேரளாவில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம்

ABOUT THE AUTHOR

...view details