தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனைவியை கத்தியால் குத்திய கணவன் மர்ம மரணம் - காவல்துறை விசாரணை - husband and wife fight

அரும்பாக்கத்தில் குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் தாக்கிய கணவன், வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவலர்கள் விசாரணை
காவலர்கள் விசாரணை

By

Published : Dec 20, 2021, 11:20 AM IST

Updated : Dec 20, 2021, 12:23 PM IST

சென்னை: அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த ஆனந்த் குமார் (40) தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவருக்கும் அவரது மனைவி தனலட்சுமிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் (டிசம்பர் 18) இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆனந்த் குமார், மனைவி தனலட்சுமியை தாக்கி, கத்தியால் கையை வெட்டியுள்ளார்.

பின்னர் அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் காயமடைந்த தனலட்சுமியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் நேற்று (டிசம்பர் 19) காலை சம்பவ இடத்திற்குக் காவல் துறையினர் சென்றனர்.

அப்போது ஆனந்த் குமார் வீடு வெளிப்புறத்தில் தாழிட்டு பூட்டப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அவர் கேபிள் ஒயரில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். அவரின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த ஆனந்த் குமாரின் தலையில் ரத்தம் காயம் இருந்தால், இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:தரமற்ற உணவு சமைத்து அளித்த கிச்சன் மேற்பார்வையாளர்கள் இருவர் கைது

Last Updated : Dec 20, 2021, 12:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details