தமிழ்நாடு

tamil nadu

சார்ஜ் போட்டபடி போன் பேசிய அரசு ஊழியர்.. மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..

ஆவடியில் குளித்த கையோடு சார்ஜ் ஏறிக்கொண்டு இருந்த செல்போனில் பேசிய மத்திய அரசு ஊழியர், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

By

Published : Nov 24, 2022, 2:44 PM IST

Published : Nov 24, 2022, 2:44 PM IST

man death due to electric shock  electric shock  mobile phone  charge  chennai  chennai news  chennai latest news  மத்திய அரசு ஊழியர்  மத்திய அரசு ஊழியர் உயிரிழப்பு  மின்சாரம்  அரசு ஊழியர் உயிரிழப்பு  மின்சாரம் பாய்ந்து மத்திய அரசு ஊழியர் உயிரிழப்பு  சார்ஜ்  மறுசீரமைப்பு  வர்ணம் பூசும் பணி
மின்சாரம் தாக்கி மத்திய அரசு ஊழியர் உயிரிழப்பு

சென்னை: ஆவடி கௌரி பேட்டையை சேர்ந்தவர் பால்பாண்டி (59). இவர் ஆவடியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான சிவிஆர்டிஇ தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆவடி ஜேபி எஸ்டேட்டில் ஒரு பழைய வீட்டை வாங்கி உள்ளார்.

அந்த வீட்டில் மறுசீரமைப்பு பணிகள் முடிவுற்று, வர்ணம் பூசும் பணி செய்து வந்துள்ளார். சனி, ஞாயிறு அன்று வேலையாட்கள் வராததால் பால்பாண்டி தனியாக வர்ணம் பூசி வந்துள்ளார். அப்போது தனது செல்போனுக்கு சார்ஜர் போட்டு விட்டு குளிக்க சென்றுள்ளார்.

குளித்துவிட்டு பாத்ரூமில் இருந்து வெளியே வந்தவுடன், ஈர கையோடு தன்னுடைய செல்போனில் யாருடனோ பேசியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சார்ஜர் ஒயரில் இருந்து மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வீட்டின் அருகே உள்ளவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற ஆவடி காவல்துறையினர், பால்பாண்டியின் உடலை கைபற்றி உடற்கூராய்வுக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கரூர்: தனியார் பள்ளி மாணவன் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details