தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூட்டு வலி: மாடியிலிருந்து குதித்து ஒருவர் தற்கொலை

அயனாவரம் அருகே மூட்டு வலி காரணமாக ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெங்கடேசன்
வெங்கடேசன்

By

Published : Jan 11, 2022, 8:33 PM IST

சென்னை: அயனாவரம் கே.ஹெச். சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவந்தவர் வெங்கடேசன் (57). இவருக்குத் திருமணமாகி சுனிதா (54) என்ற மனைவியும், சித்தார்த் (16), வர்ஷா (15) என இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.

வெங்கடேசன் மரைன் இஞ்ஜினியரிங் படிப்பு முடித்துவிட்டு தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தார். இவர் மூட்டு வலியால் அவதிப்பட்டுவந்த நிலையில் நேற்று (ஜனவரி 10) அண்ணா நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினார்.

இரவு முழுவதும் மூட்டு வலியால் அவதிப்பட்டுவந்த இவர், அதிகாலை மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக கே.எம்.சி. மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து அயனாவரம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:இன்ஸ்டாகிராமில் பழகி சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது

ABOUT THE AUTHOR

...view details