தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீதிபதி கண் முன்னே மனைவியை கத்தியால் குத்திய கணவன் - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: விவாகரத்து வழக்கில் நீதிபதி கண் முன்னே மனைவியை, கணவன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai highcourt

By

Published : Mar 19, 2019, 3:12 PM IST

விவாகரத்து வழக்கு தொடர்பான விசாரணைக்காக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை குடும்பநல நீதிமன்றத்திற்கு வந்திருந்த சரவணன் என்பவர், தனது மனைவி வரலட்சுமியை கத்தியால் சரமாரியாக குத்தினார்.

குடும்பநல நீதிமன்ற நீதிபதி கலைவாணன் முன்னே நடைபெற்ற இந்த சம்பவத்தையடுத்து, சரவணனை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்ற வளாகத்திலுள்ள காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இதனிடையே உடலில் கடுமையான வெட்டுக்காயங்களுடன் பாதிக்கப்பட்ட வரலட்சுமியை அருகிலிருந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

இதைத்தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் சரவணன் எப்படி கத்தியுடன் அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்தும், வரலட்சுமியை கத்தியால் குத்தியதற்கான காரணம் குறித்தும் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.


ABOUT THE AUTHOR

...view details