தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன் விரோதம்: நண்பரைக் கத்தியால் குத்திய நபருக்கு போலீஸ் வலைவீச்சு! - man attempt murder against his friend

சென்னை: முன் விரோதம் காரணமாக நண்பரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற நபரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

நண்பரை கத்தியால் வெட்டிய நபருக்கு போலீஸ் வலைவீச்சு
நண்பரை கத்தியால் வெட்டிய நபருக்கு போலீஸ் வலைவீச்சு

By

Published : Mar 14, 2020, 12:53 PM IST

சென்னையை அடுத்துள்ள குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (35). இவர் மாம்பலம் ரயில் நிலைய படிகட்டு அருகே விக்கி (20) என்பவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதையடுத்து விக்கி படிக்கட்டில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விஜயை தாக்க முயன்றார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த விக்கி, தன் உயிரைக் காப்பாறிக்கொள்ள ஓடினார். இருப்பினும், அவரை விடாமல் துரத்திச் சென்ற விக்கி, தலை, கை பகுதிகளை வெட்டிவிட்டு தப்பி ஓடினார். இதில் பலத்த காயமடைந்த விஜயை அருகிலிருந்த பொதுமக்கள் மீட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாம்பலம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரனையில், ஏற்கனவே விக்கிக்கும், விஜய்க்கும் இடையே முன் விரோதம் இருந்ததாகவும், விக்கி மீது மாம்பலம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:பெரியமேடு பகுதியில் இளைஞர் கட்டையால் அடித்து கொலை

ABOUT THE AUTHOR

...view details