சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த ஏழுமலை, அயனாவரம் மார்கெட் பகுதியில் உள்ள இனிப்பகத்தில் இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டைக் கொடுத்து இருநூறு ரூபாய்கு ஸ்வீட் வாங்கிவிட்டு, மீதம் ஆயிரத்து 800 ரூபாயை வாங்கிக் கொண்டார்.
அவர் கொடுத்தது கள்ள நோட்டு எனத் தெரியாத கடைக்காரர், அவருக்கு சில்லறையைக் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து கே.கே.நகர் சந்தின் வழியாக ஏழுமலை ஓட ஆரம்பித்த போது, கடையின் உரிமையாளருக்குச் சந்தேகம் ஏற்படவே அந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டை பார்த்தபோது கள்ளநோட்டு என்று தெரிய வந்தது.
பின்னர் ஏழுமலையை பின் தொடர்ந்து விரட்டியுள்ளார். ஏழுமலை கேகே நகர் வழியாக வந்து K.H ரோடில் ஆட்டோ ஏறும்போது மடக்கிப் பிடித்த கடை உரிமையாளர் அருணகிரி, ஏழுமலையை அயனாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.