தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாம்பழத்துடன் மறைத்துவைத்து மதுபானம் கடத்தியவர் கைது! - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: ஆந்திராவிலிருந்து மாம்பழத்துடன் மறைத்துவைத்து மதுபானம் கடத்திவந்தவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

மாம்பழத்துடன் மறைத்து வைத்து மதுபானம் கடத்தியவர் கைது
மாம்பழத்துடன் மறைத்து வைத்து மதுபானம் கடத்தியவர் கைது

By

Published : Jun 7, 2021, 12:29 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் ஆந்திர மாநிலத்தில் மதுபான விற்பனை அமோகமாக நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் ஆந்திராவிலிருந்து சென்னைக்கு காய்கறிகள், பழங்களுடன் மதுபானங்களைக் கடத்திவரும் சம்பவம் அதிகரித்துவருகிறது.

சென்னை தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்புத் திலகர் நகரைச் சேர்ந்த வரதராஜன் (35) ஆந்திராவிலிருந்து 17 குவாட்டர் பாட்டில்களை மாம்பழங்களுடன் மறைத்துவைத்து கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்திற்கு கொண்டுவந்தார்.

மாம்பழத்துடன் மறைத்துவைத்து மதுபானம் கடத்தியவர் கைது

உடனே அவரைக் கைதுசெய்த தண்டையார்பேட்டை காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: வாணியம்பாடியில் 4000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

ABOUT THE AUTHOR

...view details