தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாடகைக்கு வீடு தேடுபவர்களை குறிவைத்து மோசடி... லட்சக்கணக்கில் சுருட்டிய லண்டன் பல்கலைக்கழக மாணவர்! - crime

ஓ.எல்.எக்ஸ், நோ புரோக்கர் இணையதளங்களின் மூலம் வாடகைக்கு வீடு தேடுபவர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டவரை சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்தனர்

மோசடி
மோசடி

By

Published : Oct 15, 2021, 9:54 PM IST

சென்னை: குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் கார்த்திக். மருத்துவரான இவர் கொளத்தூரில் உள்ள பிரசாந்த் மருத்துவமனையில் எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

பணத்தை இழந்த மருத்துவர்!

இந்நிலையில், குரோம்பேட்டையில் இருந்து கொளத்தூர் வந்து செல்வதற்கு சிரமமாக இருந்ததால் கொளத்தூர் அருகே வாடகைக்கு வீடு பார்த்து குடியேறுவதற்காக ஆன் லைன் இனையதளம் மூலமாக கார்த்திக் வீடு தேடியுள்ளார்.

கார்த்திக் வீடு தேடுவதை அறிந்து செல்போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் அண்ணா நகர் மேற்குப் பகுதியில் உள்ள NEWRY TOWER என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு இருப்பதாகத் தெரிவித்து வாட்சப் மூலமாக வீட்டின் புகைப்படங்களை அனுப்பியுள்ளார். மேலும் தான் வீட்டின் உரிமையாளர் என்றும், தான் வெளியூரில் இருப்பதாகவும் கூறி முன்தொகை கேட்டுள்ளார்.

மோசடி

வாடகை ஒப்பந்தப்பத்திரம் போட்டு வாட்சப்பில் அனுப்பி அவர் முன் தொகையை அனுப்புமாறு கூறிய நிலையில், அதனை நம்பிய மருத்துவர் கார்த்திக், வங்கிக் கணக்கு மூலமாக ஐந்து தவணையாக 57 ஆயிரம் அனுப்பியுள்ளார். பின்னர் அந்த வீட்டில் குடியேறுவதற்காக முயற்சி செய்தபோது உரிமையாளரின் செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் அதிர்ச்சி அடைந்து அந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்குசென்று விசாரித்துள்ளார்.

வாடகைக்கு வீடு தேடுபவர்களைக் குறிவைத்து மோசடி

சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றம்

அப்போதுதான் அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். தொடர்ந்து இது குறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், அண்ணா நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவுக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது.

வாடகைக்கு வீடு தேடுபவர்களைக் குறிவைத்து மோசடி

தொடர்ந்து சைபர் கிரைம் காவலர்கள் மேற்கொண்ட விசாரணையில் வங்கிக் கணக்கு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் (34) என்பவருடையது எனத் தெரியவந்தது.

சொந்த ஊரில் அவர் இல்லாத நிலையில் வங்கி எண், கார்த்திக் கொடுத்த செல்போன் எண்ணின் டவர் ஆகியவற்றை வைத்து வடபழனியில் அவர் இருந்ததும் கண்டறியப்பட்டது. மேலும் இரண்டு செல்போன் எண்களுக்கு வந்த செல்போன் அழைப்புகளை பரிசோதனை செய்ததில் 10க்கும் மேற்பட்டவர்கள் புஷ்பராஜால் ஏமாற்றப்பட்டதை அறிந்த சைபர் கிரைம் காவலர்கள் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

வாடகைக்கு வீடு தேடுபவர்களைக் குறிவைத்து மோசடி

தொடர் விசாரணைக்கு பிறகு வடபழனியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த புஷ்பராஜை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையில் இது போன்று பல்வேறு இடங்களில் அவர் கைவரிசையைக் காட்டியது தெரியவந்தது.

புஷ்பராஜ்

வாடகைக்கு வீடு தேடுபவர்களுக்கு வலை...

புஷ்பராஜ், ஓ.எல்.எக்ஸ், NO BROKER.COM போன்ற ஆன்லைன் வெப்சைட்களில் வீடு வாடகைக்கு தேவைப்படுபவர்களின் எண்களை முதலில் சேகரித்தும், மற்ற இணைய தளங்களில் வீடு வாடகைக்கு என கொடுக்கப்பட்டுள்ள விளம்பரங்களை எடுத்தும் திட்டமிட்டுள்ளார். தொடர்ந்து NO BROKER.COM இணையதளம் மூலமாக வீடு வாடகைக்கு உள்ளதாகக் கூறி பதிவேற்றி இவரது செல்போன் எண்ணைக் கொடுத்து அதில் தொடர்பு கொள்பவர்களுக்கு போலியாக வாடகை ஒப்பந்தப்பத்திரம் தயார் செய்து கொடுத்து, வங்கி மூலமாக பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளார்.

பீகாரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கொரட்டூரில் வீடு வாடகைக்குத் தேவை என்று தேடியபோது இந்நபரிடம் சிக்கி 8.5 லட்ச ரூபாயை இழந்துள்ளார். இதே போன்று சென்னையில் பல்வேறு நபர்களிடம் மோசடி செய்து லட்சக்கணக்கில் சம்பாதித்த இவர், அப்பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்துள்ளார்.

மோசடி

லண்டனில் படித்து திரும்பி மோசடி...

இந்நிலையில், லண்டனில் தான் MS கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் முடித்து விட்டு சென்னையில் சில காலம் இதே போன்று இணையத்தளத்தில் பணிபுரிந்து வந்ததாகவும், ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான நிலையில் போதிய வருமானம், வேலைவாய்ப்பு இல்லாததால் ஏற்கெனவே பணி செய்த அந்த அனுபவத்தை வைத்து இது போன்ற மோசடியில் ஈடுப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தான் இவ்வாறு சம்பாதித்த பணத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மட்டும் 11 லட்சத்தை இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து காவல் துறையினர் புஷ்பராஜைக் கைது செய்து அவரிடம் இருந்து ஆறாயிரம் ரூபாயை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். மேலும், வாடகைக்கு இணையதளம் மூலம் வீடு தேடுபவர்கள் நேரடியாகச் சென்று வீட்டை பரிசோதனை செய்து பணத்தை செலுத்துமாறும், வீட்டின் உரிமையாளர்களும் உஷாராக இருக்குமாறும் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:கல்லூரிப் பேருந்தை மறித்து டான்ஸ் ஆடிய போதை பாய்ஸ் - கப் ஐஸ் அடித்த போலீஸ்

ABOUT THE AUTHOR

...view details