சென்னை: சா்வதேச விமான நிலையத்தில் இருந்து கிரி (45) என்பவா் நேற்று (ஜுன்.30) இண்டிகோ ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் மூலம் கத்தாா் தலைநகா் தோகா செல்லவிருந்தார். அவ்விமானப் பயணிகளிடம் குடியுரிமை அலுவலர்கள் பாஸ்போா்ட், ஆவணங்களை சோதனை செய்தனர்.
அப்போது, கிரி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கத்தாா் நாட்டிற்கு சென்றுவிட்டு, அங்கிருந்து இந்திய அரசால் பயணிக்க தடை விதிக்கப்பட்ட ஏமன் நாட்டிற்கு சட்ட விரோதமாக சென்று வந்திருந்தது தெரியவந்தது.
ஏமன், லிபியா ஆகிய நாடுகளுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா்கள் செல்லக்கூடாது என்று ஒன்றிய அரசு கடந்த 2014ஆம் ஆண்டு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இத்தடையை மீறி செல்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இந்த நடைமுறை தற்போது வரை தொடர்ந்து வருகிறது.