தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி ஆவணம் சமர்ப்பித்து வங்கி கடன் பெற்றவர் கைது - போலியான ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம்

சென்னையில் HDFC வங்கியில் போலி ஆவணங்கள் தயார் செய்து ஆள்மாறாட்டம் செய்தவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

HDFC வங்கியில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து ஆள்மாறாட்டம் செய்து நுகர்வோர் கடன் பெற்ற நபர் கைது
HDFC வங்கியில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து ஆள்மாறாட்டம் செய்து நுகர்வோர் கடன் பெற்ற நபர் கைது

By

Published : Apr 30, 2022, 6:18 AM IST

சென்னை: உள்ள HDFC வங்கி லிமிடெட், ஏரியா மேனஜர் வெங்கட்ராமன் என்பவர் சென்னை ஆவடியை சேர்ந்த விஜய் மற்றும் அவரது தாய் கீதா ஆகிய இருவரும் போலியான ஆவணங்கள் தயார் செய்து HDFC வங்கியின் நுகர்வோர் கடன் மூலம் Apple Mac Book லேப்டாப் மற்றும் Sony TV வாங்கி தவணை தொகையை கட்டாமல் ஏமாற்றி வருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வுப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வுப் பிரிவு தனிப்படை போலீசார் விசாரணையில் விஜய் என்ற பெயரில் ஓம் விக்னேஷ் குமார் மற்றும் அவரது தாய் கீதா ஆகிய இருவரும் போலியான முகவரியிட்ட ஆவணங்களை வங்கியில் சமர்ப்பித்து, ஆள்மாறாட்டம் செய்து HDFC வங்கியின் நுகர்வோர் கடன் மூலம் லோன் பெற்று Apple Mac Book லேப்டாப் மற்றும் Sony TV ஆகியவற்றை வாங்கி தவணை தொகையை செலுத்தாமல் ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்தது

இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்திய போலீசார், ஆவடியில் பதுங்கியிருந்த விக்னேஷ் குமார்( 27) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ஓம்விக்னேஷ்குமார் போலி ஆவணங்கள் தயார் செய்தும் அதன் மூலம் ஆள்மாறாட்டம் செய்து பலரை ஏமாற்றிய வழக்கில் ஏற்கனவே கைதாகியுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து ஓம் விக்னேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:போலி ஆவணங்கள் மூலம் 33 கோடி ரூபாய் ‌மோசடி: முன்னாள் உதவி பொது மேலாளர் கைது

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details