சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வருகை பகுதிக்கு எதிரில் உள்ள கார் பார்க்கிங்கில், சென்னை சேர்ந்த ஞானப்பிரகாசம் (52) என்பவர் தனது காருக்காக காத்திருந்தாா். அப்போது அதே பகுதியில் நீண்ட நேரமாக சுற்றிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர், ஞானபிரகாசம் கையில் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு, அங்கிருந்து ஓடத் தொடங்கினார். இதனால் அதிா்ச்சியடைந்த ஞானப்பிரகாசம், கூச்சல் போட்டப்படி செல்போன் திருடனை, விரட்டிச் சென்றாா். அப்போது சக விமான பயணிகள் சேர்ந்து செல்போன் திருடனை மடக்கிப் பிடித்தனர்.
சென்னை விமான நிலையத்தில் பயணியிடம் செல்போன் திருடியவர் கைது
சென்னை சா்வதேச விமானநிலையத்தில் துபாயிலிருந்து வந்த பயணியின் செல்போனை பறித்துக்கொண்டு ஓடிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
தர்ம அடி கொடுத்து சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், செல்போனை பறித்து கொண்டு ஓடியவா் பெயா் ராஜ்குமார் (32), சிதம்பரம் அருகே உள்ள புவனகிரியை சேர்ந்தவர். வேலை தேடி சென்னை வந்த நிலையில் வேலை எதுவும் கிடைக்காததால், சொந்த ஊர் திரும்புவதற்கு எண்ணினார். ஆனால் கையில் பணம் இல்லாததால், செல்போனை பறித்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் அதிருப்தியை வெளிப்படுத்தக் கூடாது - காவலர்களுக்கு டிஜிபி எச்சரிக்கை