சென்னை: அம்பத்தூரை அடுத்த பாடி வடக்கு மாட வீதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (40). இனிப்பு கடை நடத்தி வரும் இவர் பாடி- மண்ணூர்பேட்டை வியாபாரிகள் சங்க பொருளாளராகவும் பதவி வகித்து வருகிறார். நேற்று (ஏப்ரல்.3) இரவு செல்வகுமார் பாடி ஜெகதாம்பிகை நகரில் உள்ள பாடி, மண்ணூர்பேட்டை வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் வரவு செலவு கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்குச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும் பாடி சி.டி.எச் சாலையில் போட்டோ ஸ்டூடியோ நடத்திவரும் அமுல்ராஜ் (61) என்பவர் வந்துள்ளார். இந்தநிலையில், வரவு - செலவு கணக்குகளைப் பார்ப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆத்திரமடைந்த அமல்ராஜ் மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து செல்வகுமாரை சரமாரியாகக் குத்தியுள்ளார்.