சென்னை:திருநெல்வேலி மாவட்டம், மலையடிகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் (எ) வேல்துரை(33), தனது மனைவி கோமதி உடன் ஈக்காட்டுத்தாங்கல் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், இவரது மனைவிக்கு கோமதிக்கும், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கால்டாக்சி ஓட்டுநர் வீரபுத்திரன்(37) என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இதனால், தனது கணவர் வெளியூர் சென்ற நேரத்தில் கோமதி, அவருடன் உல்லாசமாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இவை குறித்து அறிந்த கோமதியின் கணவர், தனது மனைவியைக் கண்டித்த நிலையில் இருவருக்கும் இடையேயான தொடர்பை துண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வீரபுத்திரன், நேற்று (டிச.25) கோமதியின் வீட்டிற்குச் சென்று சண்டையிட்டுள்ளார்.