தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலீசார் பொருத்திய சிசிடிவி கேமராவை நொறுக்கிய நபர் கைது! - Man arrested for smashing CCTV camera fixed by police

சென்னை: பொழிச்சலூர் முத்து மாரியம்மன் கோயிலில் காவல் துறையினர் பாதுகாப்பிற்காக பொருத்திய சிசிடிவி கேமராவை அடித்து நொறுக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

chennai

By

Published : Oct 24, 2019, 1:44 PM IST

சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் முத்து மாரியம்மன் கோயில் வளாகத்தில் சிலர் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபடுவதாக சங்கர் நகர் காவல் துறையினருக்கு புகார்கள் வந்தன.

புகாரின் பேரில் காவல் துறையினர், கோயிலைச் சுற்றி மூன்று சிசிடிவி கேமராக்களை பாதுகாப்பிற்காக பொருத்தி கண்காணித்து வந்தனர். இதையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த மாதவன்(22) என்பவர் நேற்றிரவு தனது நண்பர்கள் நான்கு பேருடன் முத்து மாரியம்மன் கோயிலுக்குச் சென்று அங்குள்ள கிணற்றின் அருகே மது அருந்தியுள்ளார்.

பொழிச்சலூர் முத்து மாரியம்மன் கோயில்

பின்னர் அவர்கள் ஐந்து பேரும் சிசிடிவி கேமராவால் மாட்டிக்கொள்ள கூடாதென அதனை உடைத்து நொறுக்கி கிணற்றில் வீசிச்சென்றுள்ளனர். தகவலறிந்த சங்கர் நகர் காவல் துறையினர் மாதவனை கைது செய்து தலைமறைவாக உள்ள அவரது நண்பர்கள் சுருளி, பவுன், சாலமன், கார்த்திக் ஆகிய நான்கு பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: எல்இடி டிவிக்களை கொள்ளையடிக்கும் திருடர்கள்: வெளியான சிசிடிவி காட்சிகள்

ABOUT THE AUTHOR

...view details