சென்னை: சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (40), இவர் தனது வீட்டருகே உள்ள 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பகுதி மக்கள் சசிகுமாரை பிடித்து அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
தாயை இழந்த 11 வயது சிறுமி தனது வளர்ப்பு தந்தையுடன் வசித்து வந்துள்ளார். தந்தையும் உடல்நிலை சரியில்லாத நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி சசிகுமாரின் வீட்டிற்கு அடிக்கடி சென்றுவந்துள்ளார்.
அப்போது, சசிகுமார் சிறுமிக்கு பலமுறை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். வயிற்று வலியால் துடித்த சிறுமியை அவரது தந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இதையடுத்து சிறுமியின் தந்தை கொடுத்த தகவலின்பேரில், அங்குள்ள பொதுமக்கள் சசிகுமாரைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சசிகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர். சசிகுமார், இதுபோல பல பெண்களிடம் தவறாக நடக்க முயற்சிசெய்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க:சிறுமி பாலியல் வன்புணர்வு: காரைக்காலில் போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது!