சென்னை அடுத்துள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டை, தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி ஆகும். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் பெரும்பாலான வட மாநிலத் தொழிலாளர்கள் கஞ்சா போதையில் சுற்றித் திரிவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் நிலைய ஆய்வாளர் விஜயராகவன் தலைமையில் காவல் துறையினர் கஞ்சா விற்பனை செய்யும் நபர்களைத் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் பட்டரவாக்கம் - ஜி.என்.டி சாலையில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞரைச் சுற்றி வளைத்து, பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.