சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (65), தனது வங்கி கணக்கில் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை ஏடிஎம் மையத்தில் இருந்து எடுத்துள்ளதாக குறுந்தகவல் வந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிரபாகரன் உடனடியாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும் ஏடிஎம் மையத்திற்கு பிரபாகரன் பணம் எடுக்கச் சென்ற போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உதவுவதாகக் கூறி தன்னிடம் இருந்த ஏடிஎம் கார்டை பெற்று பணம் எடுத்து தந்ததாக கூறினார். இப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ஏடிஎம்மில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, பணம் எடுக்க வந்த பிரபாகரனிடம், நபர் ஒருவர் பணம் எடுத்து தருவதாகக் கூறி போலி ஏடிஎம் கார்டை தந்துவிட்டு செல்வது சிசிடிவியில் தெரியவந்தது.