தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமண ஆசை காட்டி மாணவி பாலியல் வன்புணர்வு:  இளைஞர் போக்ஸோவில் கைது! - காவல்துறை விசாரணை

சென்னை: ஆவடி அருகே திருமண ஆசை காட்டி மாணவியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த இளைஞரை காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.

Man arrested for raping student for marriage desire
Man arrested for raping student for marriage desire

By

Published : Jan 31, 2021, 7:44 AM IST

சென்னை ஆவடி உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 21ஆம் தேதி இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, மாணவியைத் தேடி வந்த அவரது உறவினர்கள் காவல்துறையிலும் புகாரளித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், மாணவியை கண்டுபிடித்து தருமாறு அவரது பாட்டி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவியை கண்டுபிடித்து தர காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர், மாணவிக்கு திருமண ஆசைகாட்டி கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த இருவரையும் நேற்று (ஜன.30) காவல்துறையினர் கண்டுபிடுத்தனர்.

இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், தனியார் நிறுவன ஊழியர் மாணவிக்கு திருமண ஆசை காட்டி கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து, வழக்கை போக்சோ சட்டத்தின்கீழ் பதிவு செய்த காவல்துறையினர், அந்த இளைஞரை கைது செய்தனர். மாணவியை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், அதன் பிறகு திருவள்ளூரில் உள்ள மகளிர் காப்பகத்தில் சேர்த்தனர்.

இதையும் படிங்க: காதலை சொல்ல இளம்பெண் வீட்டிற்குள் புகுந்த இளைஞர்!

ABOUT THE AUTHOR

...view details