சென்னை திருவொற்றியூர் தேரடி பகுதியில் தொண்டர் இயக்கம் சார்பில் அதன் தலைவர் தொண்டன் சுப்ரமணி தலைமையில் கடந்த சில நாள்களாக அரசுப் பேருந்துகளை இயக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று (ஆக.24) அங்கு வைக்கப்பட்டிருந்த மாதிரி அரசு பேருந்திற்கு மாலை அணிவித்து, இறுதி காரியம் செய்து, பெண்கள் ஒப்பாரி பாடி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.