சென்னை: வண்ணாரப்பேட்டை காளிங்கராயன் தெருவில் மார்பளவு கொண்ட எம்.ஜி.ஆர் சிலை அமைந்துள்ளது. இந்த சிலையின் மீது நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சிவப்பு நிற பெயிண்டை ஊற்றி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக, அங்குள்ள பொதுமக்கள் வண்ணாரப்பேட்டை காவல்துறைக்கு புகார் அளித்தனர். மேலும் அதிமுக தொண்டர்கள் சம்பவ இடத்தில் ஒன்று கூடியதால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு நபர் எம்.ஜி.ஆர் சிலை மீது சிவப்பு பெயிண்ட் ஊற்றியதும், முக அடையாளங்களை வைத்து பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த லியோநார்ட்(43) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட லியோநார்ட் என்பவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், சைதாப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதும் தெரிய வந்தது.
இதையும் படிங்க: கத்தியை காட்டி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்.. 'டேட்டிங் ஆப்' மூலம் மோசடி செய்த கும்பல் கைது!