விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவது தொடர் கதையாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ராஜபாளையம் அய்யனார் கோவில் பகுதியில் இருந்து சுந்தரராஜபுரம் செல்லும் காட்டுப்பகுதியில் மூன்று புள்ளி மான்கள், ஒரு மிளாவை வேட்டையாடி இறைச்சியை விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்து.
விலங்குகளை வேட்டையாடி இறைச்சி விற்பனை - ஒருவர் கைது! - virudhunagar man arrested
விருதுநகர்: ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் மூன்று புள்ளி மான்கள், ஒரு மிளா ஆகியவற்றை வேட்டையாடிய ஒருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வேட்டையாடிய ஒருவர் கைது செய்து சிறையில் அடைப்பு
இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற வனத்துறையினர் மான்களை வேட்டையாடிய கணபதி சுந்தர நாச்சியார் புரம் பகுதியைச் சேர்ந்த காசிராஜன் (40) என்பவரை கைது செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மூதாட்டியின் உயிர் காக்கப் போராடிய இளம்பெண்ணை பாராட்டிய ஸ்டாலின்