கிண்டி சிப்காட் பகுதியில் சிறு தொழிலகம் நடத்திவருபவர் துரைசாமி (61). இவருக்கு நேற்று மாலை ஒரு ஃபோன் கால் வந்தது. அதில் பேசிய நபர், தான் அமைச்சர் ஜெயக்குமார் பேசுவதாகவும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி நலப்பணிகள் செய்ய இருப்பதால் ரூபாய் 80,000 வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஆரம்பத்தில் பணம் தர முடியாது என்று கூறிய துரைசாமி, பின்னர் 30,000 ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து பணம் கேட்ட அந்த நபர் வங்கிக்கணக்கு அனுப்பி வைத்தார். அதனை சோதனை செய்து பார்த்தபோது முகமது ரஃபிக் என்பவரது பெயரில் அக்கணக்கு இருப்பது தெரியவந்தது. சந்தேகமடைந்த துரைசாமி, அமைச்சர் ஜெயக்குமாரின் அலுவலகத்திற்கு நேரடியாக ஃபோன் செய்து கேட்டபோது, அமைச்சர் ஜெயக்குமார் பேசவில்லை என உறுதியானது.