கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக, சென்னை தாம்பரம் ஜிஎஸ்டி சாலை அருகாமையில் உள்ள எம்.ஆர் சினிமா தியேட்டர் ஆறு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 2) நள்ளிரவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர், போனில் தொடர்பு கொண்டு எம்ஆர் தியேட்டரில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறினார்.
சினிமா தியேட்டருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது - தாம்பரம் சினிமா தியேட்டர்
சென்னை: தாம்பரம் அருகே உள்ள சினிமா தியேட்டருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து தாம்பரம் காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தியேட்டரில் சோதனை நடத்தியபோது தவறான தகவல் என தெரியவந்தது.போனில் மிரட்டல் விடுத்த ஆசாமியை தாம்பரம் காவல்துறையினர் தேடிவந்தனர். இந்நிலையில், படப்பை அருகே உள்ள நாவலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் ஜெகதீசன்(37) என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மனைவிக்கு சாதகமாக காவல்துறையினர் நடந்து கொண்டதால் அவர்களை அலைக்கழிக்க வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறினார்.