தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வைர, தங்க நகைகள் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது! - crime news

சென்னையில் டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள வைர, தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வைர, தங்க நகைகள் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது!
வைர, தங்க நகைகள் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது!

By

Published : Oct 25, 2021, 6:21 AM IST

சென்னை: சென்னையின் அண்ணா நகர் மேற்கு வள்ளலார் குடியிருப்பைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் பாக்கியலட்சுமி டிராவல்ஸ் என்னும் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இவர் அக்டோபர் 2 ஆம் தேதி தனது வீட்டின் முதல் தளத்தில் படுத்து தூங்கியுள்ளார்.

பின்னர் காலையில் எழுந்து பார்த்த போது, வீட்டின் கீழ்தளத்தில் உள்ள பீரோ உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 100 சவரன் தங்க நகைகள், ரூ. 15 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், 20 கிலோ வெள்ளி பொருள்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

கொள்ளையடிக்கப்பட்ட மொத்த பொருள்களின் மதிப்பு ரூ. 50 லட்சம் ஆகும். பின்னர் திருட்டு சம்பவம் குறித்து இளங்கோவன், திருமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர், 4 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தற்போது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தினகரன் என்பவரை காவல்துரையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ஏடிஎம் மையங்களில் உதவுவது போல் திருட்டு - பர்தா அணிந்த பெண் கைவரிசை

ABOUT THE AUTHOR

...view details