சென்னை : குவைத் ஏா்லைன்ஸ் விமானம் அதிகாலை சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போா்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுறிமை அலுவலர்கள் சோதனையிட்டனர்.
அப்போது ராமநாதபுரத்தை சோ்ந்த முனிய செல்வம் (37) என்பவரின் பாஸ்போா்ட்டை அலுவலர்கள் சோதனையிட்டனர். அவர் கடந்த 2021 ஆம் ஆண்டில் ஓட்டுநர் வேலைக்காக சவுதி அரேபியா சென்றவர், அங்கிருந்து இந்திய அரசால் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட ஏமன்நாட்டிற்கு சென்று, அங்கு சில மாதங்கள் தங்கியிருந்தது தெரியவந்தது.