சென்னை:வளசரவாக்கம் பழனி நகரை சேர்ந்தவர் ஹரிதா ராஜேஷ்வரி . இவர் வீட்டிலேயே பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஜூலை 31ஆம் தேதி ஹரிதா தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ஹரிதாவின் தந்தை ராமகிருஷ்ணன் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவம் தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
உயிரிழந்த ஹரிதாவின் செல்போனை போலீசார் கைப்பற்றி சைபர் ஆய்வக கூடத்திற்கு அனுப்பிவைத்தனர். மேலும், ஹரிதாவிற்கு டைரி எழுதும் பழக்கம் இருந்ததால், அதை வைத்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது விசாரணையில், ஹரிதா கடந்த இரண்டு ஆண்டுகளாக அரும்பாக்கத்தை சேர்ந்த மதுமோகன் (35) என்பவரை காதலித்து வந்ததும், அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஹரிதாவிடம் உடலுறவு வைத்துக்கொண்டதும் தெரியவந்தது.
இதனால், ஹரிதா கருவுற்றிருக்கிறார். இதையடுத்து, மதுமோகன் ஹரிதாவுக்கு வலுக்கட்டாயமாக மாத்திரை கொடுத்து கருவை கலைத்துவிட்டு, பின்னர் செல்போனில் பிளாக் செய்து தலைமறைவாகி இருப்பதும் தெரியவந்தது. இதனால், மனமுடைந்த ஹரிதா தற்கொலை செய்து கொண்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.