தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவாகரத்து ஆன பெண்களை குறிவைத்து ஏமாற்றிய மன்மதன் கைது

சென்னையில் விவாகரத்து ஆன பெண்களை குறிவைத்து திருமணம் செய்வதாக ஆசை கூறி பணம் மற்றும் நகைகளை பெற்று மோசடியில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.

விவாகரத்து ஆன பெண்களை குறிவைத்து ஏமாற்றிய மன்மதன் கைது
விவாகரத்து ஆன பெண்களை குறிவைத்து ஏமாற்றிய மன்மதன் கைது

By

Published : May 28, 2022, 4:57 PM IST

சென்னை: ஆவடியைச் சேர்ந்தவர் காளியம்மாள் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் வேலைக்கு ஆள்கள் தேர்வு செய்து அவர்களை பெரிய நிறுவனங்களுக்கு வேலைக்கு அனுப்பும் நிறுவனம் நடத்தி வருகிறார். காளியம்மாள் திருமணமாகி விவகாரத்து பெற்று தனிமையில் வசித்து வருகின்றார். இவருக்கு 2020 ஆம் ஆண்டு அவரது உறவினர்கள் மேட்ரிமோனி மூலம் வரன் பார்த்து வந்துள்ளனர்.

காளியம்மாள் உறவினர் அவருக்கு வரன் பார்த்தபோது மேட்ரிமோனி மூலம் சென்னை ஈக்காட்டுத்தாங்கலை சேர்ந்த அரவிந்த் என்பவரது அறிமுகம் கிடைத்தது. அப்போது காளியம்மாளிடம் தான் துபாயில் பணிபுரிந்து வருவதாகவும், தனக்கும் விவாகரத்து ஆகி நல்ல வரனை பார்த்து வருவதாகவும், அரவிந்த் கூறியுள்ளார்.

இதனை நம்பிய காளியம்மாள் திருமணம் தொடர்பாக அவரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அரவிந்த் அன்பாக நடந்து கொண்டதால் காளியம்மாள் அவரை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார். இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் கடந்த 2021 ஜனவரி மாதம் காளியம்மாளை தொடர்பு கொண்ட அரவிந்த், பெற்றோர் இல்லாமல் நீங்கள் தனிமையில் இருப்பதால் நகைகள், பணத்தை வைத்திருப்பது பாதுகாப்பாக இருக்காது.

எனவே அதனை தன்னிடம் தந்துவிடுமாறு கூறியுள்ளார். அதனை நம்பி காளியம்மாள் 50 சவரன் நகைகள் மற்றும் பணத்தை தி.நகரில் தங்கியிருந்த அரவிந்தனிடம் கொடுத்துள்ளார். நகைகள், பணத்தை பெற்றுக் கொண்ட பின் அரவிந்தனை தொடர்பு கொள்ள முடிவில்லை.

அதன்பின் அரவிந்தன் குறித்து காளியம்மாள் விசாரித்த போது அரவிந்த ஏற்கனவே திருமணம் ஆகி தி.நகரில் குடும்பத்துடன் வசித்து வருவது தெரியவந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காளியம்மாள் சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் பேரில் போலீசார் அரவிந்தனை பிடித்து விசாரணை செய்த போது மேட்ரிமோனியில் கணவர் இல்லாத பெண்கள், விவாகரத்து ஆன பெண்களை குறிவைத்து திருமணம் செய்வதாக கூறி பணம் மற்றும் நகைகளை பெற்றுக் கொண்டு தலைமறைவாகிவிடுவது தெரியவந்தது.

மேலும் அரவிந்த் மீது தேனாம்பேட்டையில் பல பெண்கள் புகார் அளித்திருப்பதும், தி.நகரில் குடும்பம் நடத்தி வரும் பெண் கூட இது போன்று ஏமாற்றி திருமணம் செய்த பெண் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்தப் பெண்ணும் அரவிந்த் மோசடி பேர்வழி என்ற தெரிந்த பின் அவர் மீது புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அரவிந்தை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சென்னை மாநகராட்சி செயற்பொறியாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ABOUT THE AUTHOR

...view details