தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெளிநாடுகளில் வேலை எனக்கூறி இலங்கைவாசிகளை சென்னை அழைத்து வந்தவர் கைது - அழைத்து வந்தவர் கைது

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இலங்கைவாசிகளை சென்னை அழைத்து வந்த நபரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 31, 2022, 4:07 PM IST

செங்கல்பட்டு:தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை ராதா நகர் சர்ச் தெருவில் இலங்கையைச்சேர்ந்த 14 நபர்கள் தங்கி இருப்பதாக சிட்லப்பாக்கம் போலீசாருக்குத் தகவல் கிடைத்ததின்பேரில், அங்கு சென்ற போலீசார் அங்கிருந்த 14 பேரையும் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இலங்கையைச்சேர்ந்த அப்துல் ஹமீத்(52) என்பவர் இலங்கையைச்சேர்ந்தவர்களை வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி, சென்னை அழைத்து வந்து தங்க வைத்துள்ளதோடு, அவர்களுக்கு வேலை வாங்கித்தராததால் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்னை ஆகியுள்ளது. பின்னர் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று அவர்களைப் பிடித்து விசாரணையில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாகக்கூறி, இளைஞர்களை சென்னைக்கு அழைத்து வந்ததாலும், விசா காலம் முடிந்தும் சட்ட விரோதமாக அவர்களை தங்கவைத்திருந்ததாலும் அப்துல் ஹமீதை போலீசார் கைது செய்து இன்று (அக்.31) தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் தலைதூக்கி வரும் தீவிரவாத செயற்பாடுகளை ஒடுக்க வேண்டும்- ஆர்.பி.உதயகுமார்

ABOUT THE AUTHOR

...view details