சென்னை: திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு கடந்த மாதம் 2ஆம் தேதி அஞ்சல் அட்டை ஒன்று வந்தது. அந்த அஞ்சல் அட்டையில் Chennai kaleda (சென்னை காலிடா) 9840101014 & 8248838351 Next Target December -25 & Happy New year 2023 Blast மறு பக்கத்தில் பிறை நிலா நட்சத்திரமிட்டு 786 மற்றும் அரபியில் சில வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.
இந்த கடிதத்தை கண்ட திருவல்லிக்கேணி போலீசார் அதிர்ச்சியடைந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
குறிப்பாக கடிதத்தில் எழுதியிருந்த இரு செல்போன் எண்களும் சென்னை பட்டாளத்தை சேர்ந்த சபீர் (38) என்பவருடையது எனவும் இவர் அண்ணாசாலை ரிச்சி தெருவில் Kuber InfoTech என்ற கடையில் Computer & Laptop Service செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது.
அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தான் கடையில் பணியில் இருந்த போது, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஹனுமந்தப்பா என்பவர் ஆப்பிள் மேக் லேப்டாப் ஒன்றை சர்வீஸ் செய்ய வந்தார். அப்போது சபீர், ஹனுமந்தப்பாவிடம் Password & ID கேட்டப்போது தனக்கு எதுவும் தெரியாது என்றும் Password & ID-ஐ மாற்றி தருமாறு கூறினார்.
இதனால் சந்தேகமடைந்த சபீர், லேப்டாப்பை பழுது பார்க்க முடியாது எனவும் வேறு கடையில் பழுது பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். ஹனுமந்தப்பா இதை தாங்கள் வைத்திருங்கள், பிறகு வந்து வாங்கிக் கொள்கிறேன் என சபீரின் செல்போன் எண்களை வாங்கி சென்றவர், மூன்று தினங்கள் கழித்து செல்போனில் தொடர்பு கொண்டார்.
அப்போது லேப்டாப் உரிமையாளர் இறந்துவிட்டதாகவும், தனக்கு Password & ID தெரியாது என்றும் லேப்டாப்பை வைத்துக்கொண்டு ரூ 40,000 தருமாறு கேட்டார். அதற்கு சபீர், பணம் தர இயலாது, லேப்டாப்பை வந்து எடுத்துச் செல் என கூறினார். ஆத்திரமடைந்த ஹனுமந்தப்பா பணம் தரவில்லை என்றால் உன்னை சும்மா விடமாட்டேன் என மிரட்டினார்.