சென்னை:திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த குமுதா (26) என்பவர் தனது கணவருடன் குரோம்பேட்டை பகுதியில் வசித்து வருகிறார். அதே பகுதியில், போக்குவரத்து காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (செப்.12) வழக்கம் போல் குரோம்பேட்டை தனியார் உணவகம் அருகில் பணியில் இருந்தார்.
அப்போது அந்த உணவகத்திற்குச் சென்ற நபர் உணவகத்தில் ரகளையில் ஈடுபட்டார். இதனைப்பார்த்த போக்குவரத்து காவலர் குமுதா தட்டிக் கேட்டபோது அருகே இருந்த கல்லை எடுத்து குமுதாவின் தலையில் தாக்கிவிட்டுச் சென்றார். இதை யாரும் தடுக்காத நிலையில் ரத்த காயத்துடன் குமுதா கீழே விழுந்தார்.