தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கஞ்சா போதையில் கிராம மக்களை கத்தியால் வெட்டிய நபர் கைது! - போதை ஆசாமி கைது

சென்னையில் கஞ்சா போதையில் சாலையிலிருந்த பெண் உள்பட நான்கு பேரை கத்தியால் வெட்டிய நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கிராம மக்களை கத்தியால் வெட்டிய போதை ஆசாமி
கிராம மக்களை கத்தியால் வெட்டிய போதை ஆசாமி

By

Published : Jul 1, 2021, 2:35 PM IST

சென்னை: ஆயிரம் விளக்கு தாமஸ் சாலை பகுதியில் நேற்று (ஜூன்.30) மாலை ஏழு மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் சிலர் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த நிலையில், அவ்வழியே ஒருவர் தகாத வார்த்தைகளால் சத்தமாக அனைவரையும் திட்டியவாறு சென்று கொண்டிருந்தார்.

கஞ்சா போதையில் சென்று கொண்டிருந்த அந்நபரை இதை அறியாத அப்பகுதி மக்கள் தட்டிக்கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த போதை ஆசாமி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவர்களை சரமாரியாகத் தாக்கினார்.

இந்தக் கொலை வெறி தாக்குதலில், உமா ராணி, பலராமன், கோபி உள்ளிட்ட நான்கு பேருக்கு வெட்டுக் காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போதை ஆசாமி கைது:

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தப்பியோட முயன்ற போதை ஆசாமியை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆயிரம் விளக்கு காவல் துறையினரிடம், அந்நபரை ஒப்படைத்தனர்.

இதையடுத்து, அவரை கைது செய்த காவல் துறையினர், காவல் நிலையல் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சூனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த நீலமேகம் என்பது தெரியவந்தது. மேலும், கஞ்சா போதை தலைக்கேறியதால் இந்தக் கொடூர செயலில் அந்நபர் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த மகளை வெட்டிக்கொன்ற தந்தை!

ABOUT THE AUTHOR

...view details