மும்பையைச் சேர்ந்தவர் உடால்ப் மேவர். இவருக்கு 27வயதில் மகள் உள்ளார். இவரது மகள் கடந்த ஓராண்டு காலமாக சென்னையில் பணிபுரிகின்றார். இவரது மகள் சென்னையில் தங்குவதற்காக ரயன் அகர்வால் என்பவர் வீடு ஏற்பாடு செய்து கொடுத்து அந்த பெண்ணிற்கு பாதுகாவலராக இருந்துவருகிறார்.
இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி ரயன் அகர்வால் அந்த பெண்ணை அடித்து தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், அந்த பெண் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்து காவல் துறையினர் ரயன் அகர்வாலை எச்சரித்துவிட்டு சென்றனர்.
இதையடுத்து ஆத்திரமடைந்த ரயன் அகர்வால் அன்று இரவு 2 மணியளவில் அந்த பெண் தங்கியிருக்கும் வீட்டிற்குச் சென்று, காவல் துறையினரிடம் ஏன் புகார் கொடுத்தாய் எனக் கூறி, கத்தியால் பெண்ணின் கை விரல்களை வெட்டியுள்ளார்.
பெண்ணின் விரல்களை வெட்டியவர் கைது - சென்னையில் மும்பையைச் சேர்ந்த பெண்ணைத் தாக்கி நபர் கைது
சென்னை: மும்பையைச் சேர்ந்த பெண்ணைத் தாக்கி கை விரல்களை வெட்டிய நபர் மீது காவல் துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெண்ணை அடித்து கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
பிறகு அந்தப் பெண்ணை அடித்து துன்புறுத்திவிட்டு கொலை மிரட்டலும் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இது குறித்து அந்தப் பெண் மும்பையில் உள்ள தனது தந்தையிடம் கூறியுள்ளார். உடனே தந்தை உடால்ப் மேவர், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல் துறை கூடுதல் தலைவர் ரவியின் எண்ணை கண்டுபிடித்து புகார் செய்துள்ளார்.
மேலும், அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிசைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து, ரயன் அகர்வால் மீது காயம் ஏற்படுத்தல்(323), ஆயுதத்தை கொண்டு தாக்குதல் (324) ,கொலை மிரட்டல் (506), பெண்ணை துன்புறுத்தல் (4tnphw act) ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையும் படிங்க:கடுமையான ஊரடங்கின் மத்தியில் கொலை - 3 பேர் கைது!
Last Updated : Apr 28, 2020, 11:28 AM IST