தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி கணக்கு காட்டி ரூ.22 கோடி ஜிஎஸ்டி வரிப்பலன் பெற்றவர் கைது! - 32 வயது வரி நிபுணரை சென்னை வெளி மண்டல ஜிஎஸ்டி மற்றும் சுங்கத்துறை அலுவலர்கள்

சென்னை: 274 கோடி ரூபாய்க்கு சரக்குகளை வழங்கியதாக கணக்கு காட்டி, 22.12 கோடி ரூபாய்க்கு ஜிஎஸ்டி உள்ளீட்டு வரிப் பலன்களை பெற்றதற்காக வரி நிபுணரை சென்னை வெளி மண்டல ஜிஎஸ்டி மற்றும் சுங்கத்துறை அலுவலர்கள் கைது செய்துள்ளனர்.

gst
gst

By

Published : Jan 27, 2021, 10:49 PM IST

நிறுவனங்கள், மூலப் பொருட்களுக்கு செலுத்தப்படும் ஜிஎஸ்டி வரி, உற்பத்தியாளர்களுக்கு உள்ளீட்டு வரியாக திரும்ப செலுத்தப்படுகிறது. சில நேரங்களில் எந்த வித சரக்குகளையும், சேவைகளையும் வழங்காமல், போலி பரிவர்த்தனைகளை கணக்கு காட்டி ஜிஎஸ்டி உள்ளீட்டு வரிப் பலன்களைத் திரும்பப் பெறுவது தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுக்க ஜிஎஸ்டி அலுவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், போலி நிறுவனங்கள் மூலம் நடைபெறாத பரிவர்த்தனைகளுக்கு, 274 கோடி ரூபாய்க்கு சரக்குகளை வழங்கியதாக கணக்கு காட்டி, 22.12 கோடி ரூபாய்க்கு ஜிஎஸ்டி உள்ளீட்டு வரிப் பலன்களை பெற்றதற்காக 32 வயது வரி நிபுணரை சென்னை வெளி மண்டல ஜிஎஸ்டி மற்றும் சுங்கத்துறை அலுவலர்கள் நேற்று கைது செய்தனர்.

இவர் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் முன்பு ஆஜரப்படுத்தப்பட்டார். பல்வேறு விசாரணை மற்றும் சோதனைகளுக்குப் பின் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் பிறரது ஆவணங்களைப் பயன்படுத்தி கேஒய்சி (KYC) சமர்பித்துள்ளதாகவும், மோசடிக்காக பல்வேறு போலி நிறுவனங்களை உருவாக்கியுள்ளதாகவும் ஜிஎஸ்டி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

போலி ஆவணங்கள் மூலம் இவர் உதவிய மற்ற நிறுவனங்கள் குறித்தும், அவற்றின் மூலம் நடத்தப்பட்ட மோசடி குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மோசடியில் ஈடுபடும் நபர்களை ஜிஎஸ்டி புலனாய்வு துறையிடம் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என அலுவலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க:கடன் பெற்று ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க வேண்டும் - பொருளாதார வல்லுநர்கள்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details