தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகர் செந்திலிடம் மோசடி செய்தவர் கைது - Actor Senthil Building For Rent

சென்னை: நடிகர் செந்திலுக்கு சொந்தமான கட்டத்தை வாடகைக்கு எடுத்து மோசடி செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Man arrested defrauding actor Senthil, நடிகர் செந்தில் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து மோசடி செய்தவர் கைது

By

Published : Nov 2, 2019, 9:44 AM IST

சென்னை சாலிகிராமம் அருகே உள்ள பாஸ்கர் காலனி மூன்றாவது தெருவில் நடிகர் செந்திலுக்கு சொந்தமான 10 அறைகள் கொண்ட கட்டடம் உள்ளது.

இதை கடந்த 2013ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சகாயராஜ் (52) என்பவர் மாதம் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து "சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்" நடத்திவந்தார்.

இந்நிலையில் சகாயராஜ் கடந்த 6 மாதங்களாக செந்திலுக்கு வாடகை கொடுக்கவில்லை என்று தெரிய வருகிறது. மேலும் அந்த கட்டடத்தில் உள்ள ஏழு அறைகளை குத்தகை, வாடகைக்கு விட்டு சகாயராஜ் பணம் சம்பாதித்து வந்ததும் தெரியவந்தது.

இதுதொடர்பாக நடிகர் செந்தில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட காவலர்கள், வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சகாயராஜை கைது செய்தனர். சகாயராஜ் சினிமா துறையில் புரொடக்சன் மேனேஜராக பணிபுரிந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ம.பி. பெண்ணை ஆசைவார்த்தைக் கூறி ஏமாற்றிய கோவை இளைஞர்!

ABOUT THE AUTHOR

...view details