தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ED Raid: தலைமைச் செயலகத்தில் புகுந்த அமலாக்கத்துறை: தேசிய தலைவர்கள் கண்டனம்! - arvind kejriwal condemned condemns

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சம்பந்தபட்ட இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையினர் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் சோதனை நடத்தியதற்கு பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 13, 2023, 8:48 PM IST

சென்னை:மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி (ED raids against Minister Senthil Balaji) வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், மதுபான பார்களில் சில ஊழல் முறைகேடுகள் நடப்பதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

மேலும், தமிழக அரசு ஒப்பந்ததாரர்கள் அலுவலகம் மற்றும் வீடுகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் சட்ட விரோதமாக பணம் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதாகக் கிடைக்கப் பெற்ற ஆவணங்களின் அடிப்படையில், இன்று (ஜூன் 13) காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி இல்லம் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

மேலும், இந்த சோதனையின் தொடர்ச்சியாக தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இவ்வாறு, தலைமைச் செயலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதற்கு, “அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பாஜகவின் அரசியல் செல்லுபடியாகாது” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

பாஜகவின் பழிவாங்கலுக்கு கண்டனம்: இந்நிலையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மம்தா பானர்ஜி அவரது ட்விட்டர் பதிவில், “திமுக மீதான பாஜகவின் (DMK vs BJP) அரசியல் பழிவாங்கலை கண்டிக்கிறேன்.

மத்திய அமைப்புகளின் துஷ்பிரயோகம் தொடர்கிறது. தமிழகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரின் அலுவலகம் மற்றும் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது பாஜகவின் அவநம்பிக்கையான செயல்கள்” என பதிவிட்டுள்ளார்.

மோடி அரசின் வெட்கக்கேடான முயற்சி:இதுகுறித்து மல்லிகார்ஜூன கார்கே, “தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதை காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது. துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் போன்றவற்றில் மோடி அரசின் வெட்கக்கேடான முயற்சிகள் இவை. அரசியல் எதிரிகளுக்கு எதிராக புலனாய்வு அமைப்புகளின் இத்தகைய மோசமான துஷ்பிரயோகம் மோடி அரசாங்கத்தின் அடையாளமாகும்.

இந்த உத்திகள் எதிர்க்கட்சிகளின் வாயை அடைப்பதில் வெற்றி அடையாது. மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிரான ஜனநாயகப் போராட்டத்தைத் தொடரும், உறுதியை மட்டுமே அவை வலுப்படுத்துகின்றன” என அறிக்கை வெளியிட்டு உள்ளார். இந்த அறிக்கையை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவை மல்லிகார்ஜூன கார்கே ரீட்விட் செய்து உள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், “எதிர்க்கட்சிகளை துன்புறுத்துவதற்கும் மிரட்டுவதற்கும் மத்திய அமைப்புகளை பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது. தமிழக மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறையின் ரெய்டுகளுக்கு கடும் கண்டனம். அரசியல் பழிவாங்கலால் நமது ஜனநாயகத்திற்கு மாற்ற முடியாத சேதத்தை பாஜக ஏற்படுத்துகிறது” எனப் பதிவிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: "உண்மைக்கு புறம்பாக ஏதும் கூறவில்லை" ஜெயலலிதாவை விமர்சித்த குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதில்

ABOUT THE AUTHOR

...view details