பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு: 196 நபர்களின் பெயர் பட்டியல் வெளியீடு - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு
19:04 October 29
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் தொடர்புடைய 196 பேரின் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடியாக வெளியிட்டுள்ளது
ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வினை 2017 செப்டம்பரில் நடத்தியது. இதில் தேர்வு எழுதியவர்களில் 196 பேர் முறைகேடாக பணம் கொடுத்து மதிப்பெண்கள் பெற்றது நிரூபிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு, செப்.16ஆம் தேதி நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட 196 நபர்களும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தக்கூடிய தேர்வுகளில் பங்கேற்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது .
இந்தநிலையில் முறைகேட்டில் ஈடுபட்ட 196 நபர்களின் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடியாக வெளியிட்டுள்ளது. இதில் முறைகேட்டில் ஈடுபட்ட நபர்களின் பெயர், அவரது முகவரி, கல்வித்தகுதி ஆகிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் அவர்கள் மீது உள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளதால், வேறு எந்த அரசுப் பணிக்கும் செல்ல முடியாத நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு: அரசு பதிலளிக்க உத்தரவு