தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உள்ளாட்சி அமைப்பு முறை மன்ற நடுவராக மாலிக் பெரோஸ்கான் பதவி ஏற்பு! - ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மாலிக் பெரோஸ்கான்

சென்னை: தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு முறை மன்ற நடுவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலர் மாலிக் பெரோஸ்கான் பதவியேற்றார்.

malik peroskhan
malik peroskhan

By

Published : Jan 8, 2021, 7:26 PM IST

Updated : Jan 10, 2021, 1:23 PM IST

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஜனவரி 8ல் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு முறை மன்ற நடுவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலர் மாலிக் பெரோஸ்கானுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் வேலுமணி முன்னிலையில் மாலிக் பெரோஸ்கான் உறுதிமொழி ஏற்றார்.

யார் இந்த மாலிக் பெரோஸ்கான்?

மாலிக் பெரோஸ்கான், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்தவர். இவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராகப் பதவி வகித்துவந்த நிலையில், 2014ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி ஓய்வுபெற்றார்.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறைச் செயலாளர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுவின் செயலர், கைத்தறி துணை ஆணையர், விலங்குகள் நல ஆணையர், தொழில் துறை இணைச் செயலாளர், ஊரக வளர்ச்சித் துறையின் சிறப்புச் செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்துள்ளார்.

தொடர்ந்து 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்று 2019ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். இரண்டு ஆண்டுகள் பொறுப்பில் இருந்த அவர், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகப் பல்வேறு வழக்குகளில் தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கம் அளித்துவந்துள்ளார்.

இதையும் படிங்க:'கார்ப்பரேட் மோடி குயிட், குயிட் கால் பேக் பேடி!'

Last Updated : Jan 10, 2021, 1:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details